• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் (திருத்தப்பட்டவாறான) சட்டத்திற்கான திருத்தம்
- 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான பிரதேச செயலக பிரிவுகளை தழுவும் விதத்தில் மத்தியஸ்த சபைகள் செயற்பட்டு வருகின்றன. இந்த மத்தியஸ்த செயற்பாட்டினை மேலும் வினைத்திறன்மிக்கதாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்துவதற்கு இந்த சட்டத்திற்கு செய்யப்பட வேண்டியத் திருத்தங்களை சிவில் சட்ட மறுசீரமைப்பு உபகுழுவினால் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த திருத்தங்களை உள்ளடக்கி 1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தை திருத்துவதற்குத் தேவையான நடவடிக்கையினை எடுக்கும் பொருட்டு நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.