• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையிலான பிணக்குகள்) சட்டத்திற்கான திருத்தம்
- பிணக்குகளைத் தீர்ப்பதற்கு இலகுவானதும் குறைந்த செலவிலானதுமான வழிமுறையொன்றாக மத்தியஸ்தம் ஏற்கனவே இலங்கையில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளது. குடிமக்களின் மேம்பாட்டிற்காக விசேட நிபுணத்துவ மற்றும் பயனுள்ள தீர்வுகள் தேவைப்படும் சமுக மற்றும் பொருளாதார பிரச்சினைகளாக கருதப்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய ஏற்பாடுகள் 2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையிலான பிணக்குகள்) சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. பிணக்குகளின் தன்மை மற்றும் வகை என்பவற்றை கருத்திற் கொண்டு விசேட தகைமைகளுடன்கூடிய மத்தியஸ்தர்களை நியமிப்பதற்கு இந்த சட்டத்தின் மூலம் நீதி அமைச்சருக்கு அதிகாரம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திலுள்ள சில ஏற்பாடுகள் சமகால தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நீதி அமைச்சின் கீழ் இயங்கும் சிவில் சட்ட மறுசீரமைப்பு உபகுழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிகளுக்கு அமைவாக 2003 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க மத்தியஸ்த (விசேட வகையிலான பிணக்குகள்) சட்டதை திருத்துவதற்கும் இதன் பொருட்டு திருத்த சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.