• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்கு விதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- உள்நாட்டு அரிசி தேவையை பூர்த்தி செய்வதற்கும் சந்தையில் நிலவும் அரிசி பற்றாக்குறையைத் தவிர்த்து மக்களுக்குத் தேவையான அரிசி தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் வழங்குவதற்கும் தேவையான வசதிகளை செய்யும் பொருட்டு 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை நிர்ணயித்து 2021 நவெம்பர் மாதம் 03 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.