• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையம் - கட்டம் II - சிவில் வேலைகள்
- இலங்கை துறைமுக அதிகாரசபையினால் முழுமையாக கையாளப்படும் முனையமொன்றாக கிழக்கு கொள்கலன் முனையத்தை கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தின் கட்டம் II இன் கீழ் சிவில் வேலைகளுக்காக சர்வதேச போட்டிக் கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, 03 விலைமுன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இவை சம்பந்தமாக அமைச்சர வையினால் நியமனஞ் செய்யப்பட்ட கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை Access Engineering PLC மற்றும் China Harbor Engineering Company Ltd கூட்டு தொழில்முயற்சிக்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.