• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு கொள்கலன் கையாளும் உபகரணங்களை கொள்வனவு செய்தல்
- இலங்கை துறைமுக அதிகாரசபையின் கிழக்கு கொள்கலன் முனையத்திற்கு கப்பலிலிருந்து கரை வரை செயற்படுத்தக்கூடிய 14 பாரந்தூக்கிகள், தண்டவாளங்கள் மீது பொருத்தி இயக்கப்படும் 40 தானியங்கி கென்றி பாரந்தூக்கிகள் மற்றும் 30 கொள்கலன் கொண்டு செல்லும் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு சர்வதேச போட்டி கேள்வி கோரும் வழிமுறையினைப் பின்பற்றி கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, 06 விலைமுன்வைப்புகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதற்கிணங்க, கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் சிபாரிசின் பிரகாரம் கப்பலிலிருந்து கரை வரை செயற்படுத்தக்கூடிய 12 பாரந்தூக்கிகள், தண்டவாளங்கள் மீது பொருத்தி இயக்கப்படும் 40 தானியங்கி கென்றி பாரந்தூக்கிகள் என்பவற்றிற்கான கேள்வியை Shanghai Zhenhua Heavy Industries Co Ltd கம்பனிக்கு வழங்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.