• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் பெல்வத்த மற்றும் செவனகல பிரிவுகளில் நிர்மாணிக்கப்படவுள்ள சூழல்நேய உயிரியல் சேதனப் பசளை உற்பத்தி நிலையங்கள் இரண்டு சார்பில் இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்தல்
- வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) கம்பனியின் பெல்வத்த மற்றும் செவனகல பிரிவுகளில் இரண்டு (02) சூழல்நேய உயிரியல் சேதனப் பசளை உற்பத்தி நிலையங்களை நிர்மாணிக்கும் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு 2021 செப்ரெம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. உத்தேச சேதனப் பசளை உற்பத்தி நிலையங்கள் இலங்கையில் இதுவரை செயற்படாமையினால் இதன் பொருட்டு தேவையான இயந்திரசாதனங்களை, பொறித் தொகுதிகளை உற்பத்தி செய்யும் வௌிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுக் கொள்ளவேண்டியுள்ளது. இதற்கிணங்க, இனங்காணப்பட்டுள்ள சீனாவின் Dongting Lake International கம்பனியிடமிருந்து குறித்த இயந்திரசாதனங்களை நேரடியாக கொள்வனவு செய்யும் வழிமுறையினைப் பின்பற்றி பெற்றுக் கொள்ளும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.