• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் ஆற்றல் வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டுக் கருத்திட்டம் - அம்பலாங்கொடை மற்றும் பன்னல நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்தல்
- ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியின் கீழ் பசுமை வலுசக்தி அபிவிருத்தி மற்றும் ஆற்றல் வினைத்திறன் மேம்பாட்டு முதலீட்டுக் கருத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றதோடு, இந்த கருத்திட்டத்தின் - பொதி - 8, லொட் - B என்பதன் கீழ் அம்பலாங்கொடை மற்றும் பன்னல நெய்யறி துணை நிலையங்களை விருத்தி செய்வதற்கும் 02 மேலதிக டிறான்ஸ்போமர்களை வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் பொருட்டு ஒரு தடவை இரட்டை உறை முறையின் கீழ் தேசிய ரீதியில் போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, 04 விலை முன்வைப்புகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இதற்கிணங்க அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய ஒப்பந்தத்தை M/s Ceylex Engineering (Pvt) Ltd கம்பனிக்கு கையளிக்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.