• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய எண்ணெய் மற்றும் வாயு கம்பனியொன்றைத் தாபித்தல்
- 2011 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆண்டு வரையிலான காலப்பகுதியில் மன்னார் படுகையில் M2 நிலப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுக்கு அமைவாக இந்நாட்டில் பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு படிவுகள் உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயு உற்பத்தி செய்துகொள்வதன் மூலம் உள்நாட்டுத் தேவை சார்பில் திரவ பெற்றோலிய இறக்குமதியின் மீது தங்கியிருப்பதனை குறைத்துக் கொள்வதற்கும் எதிர்காலத்தில் இயற்கை வாயு ஏற்றுமதியாளர் ஒருவராக மாறி அந்நிய செலாவணியை பிறப்பித்துக் கொள்வதற்கும் வாய்ப்பு கிடைக்கப் பெறும். வர்த்தக ரீதியிலான சாத்தியதகவாய்வுடன் கூடிய அகழ்வுகள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இயலுமாகும் வகையில் உள்நாட்டு வாயு அகழ்வு மற்றும் உற்பத்தி அடங்கலாக களஞ்சியப்படுத்தல், குழாய் வழியினை நிர்மாணித்தல், கொண்டு செல்தல் மற்றும் விநியோக உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், உரிமை மற்றும் கையாள்கை என்பவற்றுக்குரியதாக அரசாங்க தனியார் பங்குடமை என்னும் வடிவில் தேசிய வாயு கம்பனியொன்றைத் அரசாங்கத்தினால் தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென "இலங்கையின் இயற்கை வாயு பற்றிய தேசிய கொள்கையின்" ஊடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் கம்பனியை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் துணை கம்பனியொன்றாக தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்தக் கம்பனிக்கு 2021 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க பெற்றோலிய வளங்கள் சட்டத்தின் V ஆம் பகுதியின் பிரகாரம் கையளிக்கப்பட்டுள்ள கடமைகளையும் பணிகளையும் நிறைவேற்றும் பொறுப்பு கையளிக்கப்படும். இதற்கிணங்க, 2007 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் "தேசிய எண்ணெய் மற்றும் வாயு கம்பனியொன்றை" தாபிக்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.