• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகளில் பரஸ்பர நிருவாக ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்தல் தொடா்பிலான உடன்படிக்கை
- இலங்கை அரசாங்கத்திற்கும் வியட்நாம் அரசாங்கத்திற்கும் இடையில் நிலவிய இருதரப்பு கலந்துரையாடல்களின் பெறுபேறாக இரு நாடுகளுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகள் தொடர்பிலான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நிருவாக ஒத்துழைப்பினை பரிமாறிக் கொள்வதற்கு இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் உடன்படிக்கையொன்றைச் செய்துகொள்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. இதற்கிணங்க, வர்த்தக கொடுக்கல் வாங்கல் செலவுகளை குறைத்தல் எல்லை சார்ந்த வரியினை சரியான விதத்தில் கணக்கிடுதல் மற்றும் சேகரித்தல், வரையறைகளுக்கு உட்படுத்தியுள்ள பொருட்கள் பரிமாறிக் கொள்வதை தடை செய்தல், வரையறைகள் மற்றும் நிர்வாகம் தொடர்பிலான ஒழுங்குவிதிகளை ஆக்குதல் போன்றவற்றிற்கும் இந்த உத்தேச வர்த்தக உடன்படிக்கை பங்களிப்பினைச் செய்யும். இதற்கிணங்க, இருதரப்பினாலும் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ள உத்தேச உடன்படிக்கையினைச் செய்துகொள்ளும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.