• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய வாகன போக்குவரத்து தரவுத்தளத்தை விருத்தி செய்தலும் திறன் அபிவிருத்தியும்
- வீதிகளில் பயணிக்கும் வாகனங்களின் அளவு அதிகரித்துள்ளதன் காரணமாக தேசிய நெடுஞ்சாலைகள் முக்கியமாக கொழும்பு நகரத்திலுள்ள வீதிகளில் வாகன போக்குவரத்தினை முகாமிப்பதற்கு பொறிமுறையொன்றை உருவாக்கும் தேவை எழுந்துள்ளது. இதன் பொருட்டு வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் தற்போதுள்ள தரவுகளை இற்றைப்படுத்தும் பொருட்டு கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் உதவியினைப் பெற்றுக் கொள்வதற்கு ஏற்கனவே வௌிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் ஊடாக கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. உத்தேச நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் தேசிய ரீதியிலான வாகன போக்குவரத்து தரவு முகாமைத்துவ திட்டமொன்றைத் தயாரிப்பதற்கும் வாகன போக்குவரத்துக்கான தரவுகளை சேகரிப்பதற்கான அடிப்டையொன்றை உருவாக்கும் தானியங்கும் வாகன போக்குவரத்து தரவு முறைமை முகாமைத்துவ முறைமையொன்றை நிர்மாணிப்பதற்கும் வாகன போக்குவரத்து கேள்வியினை ஆய்வு செய்யும் ஆற்றலை விருத்தி செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் பொருட்டு கொரிய சர்வதேச நிறுவனத்தின் உதவியினைப் பெற்றுக் கொண்டு "தேசிய வாகன போக்குவரத்து தரவுத்தளத்தை விருத்தி செய்யும் மற்றும் திறன் அபிவிருத்தி கருத்திட்டத்தை" நடைமுறைப் படுத்தும் பொருட்டும் இந்தக் கருத்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலை உறுதிப்படுத்தி கொரிய சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்திற்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கும் இடையில் கலந்துரையாடல் அறிக்கை யொன்றை கைச்சாத்திடும் பொருட்டு நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.