• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரியதாக நடைமுறை யிலுள்ள சட்டங்களை திருத்துதலும் கொள்கை ஒழுக்கநெறியினைத் தயாரித்தலும்
- வெகுசன ஊடக மற்றும் தொடர்பாடல் துறையின் உலகளாவிய அபிவிருத்தியினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கையில் ஊடக தரம் சார்பில் நடைமுறையிலுள்ள சட்டங்கள், சர்வதேச சட்டங்கள், தேசிய மற்றும் சர்வதேச ஊடக நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் சமூக கலாசார அடையாளங்கள் போன்ற துறைகளின்பால் விசேட கவனம் செலுத்தி, இலங்கைக்கான ஊடக கொள்கையொன்றைத் தயாரித்தல், அதற்கு ஒருங்கிணைவாக உயர் தொழில்சார் தேர்ச்சியுடன்கூடிய ஊடக தொழில் சார்பாளர்களை உருவாக்குவதற்குத் தேவையான பின்னணியினை கட்டியெழுப்புதல், சமூக ஊடகங்கள் அடங்கலாக புதிய ஊடக பாவனை மற்றும் செயற்பாடு பற்றிய அறிவு, புரிந்துணர்வு மற்றும் தொடர்பாடல் உத்திகளை சமூகமயப்படுத்தல், டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு ஒத்திசைவதற்குத் தேவையான வசதிகளை வழங்குதல் என்பன பொருட்டு தற்போது கவனம் செலுத்தப் பட்டுள்ளது. இதற்காக சமகாலத்திற்கு ஏற்ற விதத்தில் ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் உரியதாக நிலவும் சட்டங்களை திருத்தும் மற்றும் கொள்கை, ஒழக்கநெறிகளை தயாரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த நோக்கங்களின் பொருட்டு அமைச்சரவைக்கு சிபாரிகளை சமர்ப்பிப்பதற்காக அரசாங்க மற்றும் தனியார் துறைகள், ஊடகம், சந்தைப்படுத்தல், கல்வி, சட்டங்கள், நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் போன்ற துறைகளில் அனுபவமிக்கவர்களின் பிரதிநிதித்துவத்துடன் குழுவொன்றை நியமிப்பதற்காக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.