• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-23 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அம்பாறை சரணாலயத்தினுள் புதிய எல்லைகளை பிரகடனப்படுத்துதல்
- 9,323.96 ஹெக்டாயர் விஸ்தீரணம் கொண்ட நிலப் பிரதேசத்தில் கல்ஓயா ஆற்றுப்படுகையில் வடகிழக்கு சரணாலம் அல்லது அம்பாறை சரணாலயம் 1954 ஆம் ஆண்டில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் சரணாலயமொன்றாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின்னர் கல்ஓயா விவசாய குடியேற்றத் திட்டத்தின் கீழ் நகர மையமொன்றாக தாபிக்கப்பட்ட அம்பாறை நகரம் தற்போது பாரிய அளவில் அபிவிருத்திக் கண்டுள்ளது. நகரசபை, விளையாட்டு மைதானங்கள், விகாரைகள் போன்ற அரசாங்க மற்றும் துணை அரசாங்க பொது வசதிகள் பல சரணாலயத்திலுள்ள காணியில் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை, சில காணித் துண்டுகள் அரசாங்க அனுசரணையுடன் தனியார் தரப்பினர்களுக்கு வழங்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளமை போன்ற காரணங்களினால் அம்பாறை நகரத் திட்டத்தில் தற்போது அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாக இனங்காணப்பட்டுள்ள காணித் துண்டுகளை சரணாலயத்திலிருந்து நீக்கி, புதிய எல்லைகளை பிரகடனப்படுத்துவதற்கு 2009 மே மாதம் 20 ஆம் திகதியன்று அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அம்பாறை நகரத் திட்டத்திற்குரிய காணியில் இனங்கண்டுள்ள இயற்கை வனம் அமைந்துள்ளதும் அடிக்கடி யானைகள் மற்றும் பிற வன விலங்குகள் நடமாடுகின்றதுமான பிரதேசத்தை தொடர்ந்தும் சரணாலய வலயத்திற்குரியதாக பேணுவதற்கும் இதில் அமைந்துள்ள 46.18 சதுர ஹெக்டாயர் விஸ்தீரணம் கொண்ட மக்கள் செறிந்து வாழும் மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்ட பிரதேசங்களை சரணாலயத்திலிருந்து நீக்கி பிரகடனப்படுத்துவதற்கும் புதிய எல்லைகளை வர்த்தமானியில் பிரசுரித்து அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.