• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சர்வதேச மற்றும் உள்நாட்டுத் தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் சமுத்திர சட்டங்கள் சம்பந்தமான சட்ட ஏற்பாடுகளை இனங்காணும் பொருட்டு குழுவொன்றை நியமித்தல்
- இந்து சமுத்திரத்தின் மத்தியில் இலங்கையின் மூலோபாய ரீதியிலான அமைவிடத்தைக் கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, சமுத்திர கேந்திர நிலையமொன்றாக இலங்கையை மேம்படுத்தும் போது சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாக உள்நாட்டு சட்டங்களை விதிக்கும் போதும் சர்வதேச உடன்படிக்கைகளுக்கு செயல்வலுவுக்காமளிக்கும் போதும் சர்வதேச தேவைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு சட்ட உட்கட்டமைப்பு வசதிகளை தயாரிக்கும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் இந்த துறைகளுக்குரிய விடயங்களை ஆராய்வதற்காக முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஒருவரான சனாதிபதி சட்டத்தரணி (திரு) பி.ஏ.ரத்நாயக்க அவர்களின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதோடு, இந்தக் குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள சிபாரிகள் சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அண்மையில் இலங்கை கடல் எல்லைக்குள் MT New Diamond மற்றும் MT X-Press Pearl கப்பல்கள் விபத்துக்கு உள்ளாகி ஏற்பட்ட சேதத்தினை கவனத்திற் கொள்ளும் போது புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் தேவை உறுதியாகியுள்ளது. இதற்கிணங்க, ஏற்கனவே (திரு) பி.ஏ.ரத்நாயக்க அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை அடிப்டையாகக் கொண்டு புதிதாக அறிமுகப்படுத்தவேண்டிய அல்லது நடைமுறையிலுள்ளதும் திருத்தப்பட வேண்டியதுமான சட்டங்களை இனங்கண்டு அது தொடர்பிலான சிபாரிகளை உள்ளடக்கி அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக சனாதிபதி சட்டத்தரணி (திரு) சந்தன ஜயசுந்தர அவர்களின் தலைமையில் உரிய நிறுவனங்களின் பிரதிநிகளை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினாலும் நீதி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.