• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வை மாற்றுதல்) சட்டத்தை திருத்துதல்
- எவரேனும் ஒருவரினால் உரிய முறையில் செலுத்த வேண்டிய அளவினை விட கூடுதலாக அல்லது பிழையாக வரவு வைக்கப்பட்டுள்ள அத்தகைய ஏதேனும் முத்திரைத் தீர்வை அல்லது தண்டப் பணத்தை மீள செலுத்தமாறு உரிமை கோரிக்கையொன்று செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் கூடுதலாக அல்லது பிழையாக செலுத்தப்பட்ட முத்திரைத் தீர்வையை அல்லது தண்டத் தொகையை மீளச் செலுத்துவதற்கு இயலுமாகும் வகையிலான ஏற்பாடுகளை உள்ளடக்கி 2011 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க, மாகாண சபைகள் (முத்திரைத் தீர்வை மாற்றுதல்) சட்டமூலத்தை தயாரிக்கும் பொருட்டு 2021 பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியன்று அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் உடன்பாடு கிடைக்கப் பெற்றுள்ளது. இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரித்து அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.