• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எதிர்வரும் விடுமுறை காலத்தை இலக்காகக் கொண்டு, சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- COVID - 19 தொற்றுநிலைமை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத்துறையை மீண்டும் 2021 / 2022 சுற்றுலா காலப்பகுதியில் பழைய நிலைக்கு கொ்ணடுவருதல் மற்றும் சுற்றுலாப் பயணிகளை கவரும் நோக்கில் விமான கம்பனிகள் அடங்கலாக சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட சகல தரப்பினர்களுடனும் இணைந்து கூட்டு முயற்சி எடுக்கப்பட்டுவருகின்றது. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு பணியகத்தினால் நடைமுறைப்படுத்தவுள்ள உலகளாவிய முயற்சிதிட்டங்களின் ஒரு பகுதியாக பிரதான சுற்றுலா சந்தையில் 5 வருட காலம் பயண முடிவிட முகவர் கம்பனிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்பாடல் கம்பனிகளை நியமிப்பதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த உலகளாவிய சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் துணை நடவடிக்கையொன்றாக விசேட கவனம் செலுத்த வேண்டிய சுற்றுலா சந்தைகளாக ஐக்கிய இராச்சியம், ஜேர்மன், பிரான்ஸ் மற்றும் ஆசிய வலையத்தின் பிரதான சந்தையான இந்தியாவையும் இலக்காகக் கொண்டு, சுற்றுலா மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் பொருட்டு சுற்றுலாத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.