• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் சுங்க நடவடிக்கைகளில் பரஸ்பர நிருவாக ஒத்துழைப்பினை பெற்றுக் கொள்தல் தொடா்பிலான உடன்படிக்கை
- இலங்கை அரசாங்கத்திற்கும் ரஷ்ய அரசாங்கத்திற்கும் இடையில் மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு கலந்துரை யாடல்களின் பின்னர் வௌிப்படைத்தன்மை வாய்ந்ததும் எதிர்வு கூற கூடுயதுமான சுங்க நடவடிக்கை முறையொன்றின் ஊடாக சட்டபூர்வமான வர்த்தக நடவடிக்கைகளுக்கு வசதிகளை செய்யும் பொருட்டு இருதரப்புக்கும் இடையில் இருதரப்பு உடன்படிக்கையொன்றை கைச்சாத்திடுவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக கொடுக்கல் வாங்கல்களுக்கான செலவுகளைக் குறைத்தல், நாட்டு எல்லை சார்ந்த வரிகளை செம்மையான முறையில் கணக்கிடுதல், சேகரித்தல், வரையறைகளின் கீழ் பொருட்களின் பரிமாறல்களை கட்டுப்படுத்தல் மற்றும் தடைசெய்தல் உட்பட இதற்கு உரியதான ஒழுங்குவிதிகளை வகுத்தல் போன்றவை சார்பில் இந்த உடன்படிக்கை செய்யப்படும். இதற்கிணங்க உத்தேச உடன்படிக்கையில் இருதரப்பும் கைச்சாத்திடும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.