• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தபால் அலுவலகங்களை நிர்மாணிப்பதற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் பல்பணி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துதல்
- இலங்கை தபால் திணைக்களமானது 654 பிரதான தபால் அலுவலகங்களையும் 3,410 உப தபால் அலுவலகங்களையும் கொண்ட வலையமைப்புடன் கூடிய ஒன்றாவதோடு, தற்போது இந்த 654 பிரதான தபால் அலுவலகங்களில் 154 அலுவலகங்கள் வாடகை அடிப்டையில் தனியார் கட்டடங்களில் நடாத்திச் செல்லப்படுகின்றன. தபால் அலுவலக கட்டடங்களை நிா்மாணிப்பதற்காக பல மாகாணங்களில் காணித் துண்டுகள் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் திணைக்களத்திடம் போதுமான நிதி இல்லாததன் காரணமாக உத்தேச கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு இயலாமற் போயுள்ளது. அதேபோன்று தபால் திணைக்களத்தின் வருமானம் மற்றும் செலவுகளுக்கிடையிலான வித்தியாசத்தினை குறைப்பதற்கு திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதோடு, இதன் கீழ் புதிய வருமானங்களை பிறப்பித்துக் கொள்ளும் வழிமுறைகளை இனங்காண வேண்டியத் தேவை எழுந்துள்ளது. இதற்கிணங்க தபால் திணைக்களத்தின் தேவைகளுக்கு அத்தியாவசிமான இட வசதிகளைப் பெற்றுக் கொள்தல் அதேபோன்று மேலதிக வருமான வழியினை ஏற்படுத்திக் கொள்ளும் பொருட்டு திணைக்கத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள காணிகளில் அரசாங்க - தனியார் பங்குடமை வழிமுறையின் கீழ் பல்பணி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.