• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சனாதிபதி ஊடக விருது விழா - 2022
- 'சுபீட்சத்தின் நோக்கு' தேசிய கொள்கை பிரகடனத்தின் மூலம் 21 ஆம் நூற்றாண்டிற்கு ஏற்ற சமூகத்தை உருவாக்குவதற்காக பேச்சு மற்றும் வௌிப்படுத்தல் சுதந்திரத்தை பாதுகாக்கும் பொருட்டு உச்ச அளவில் செயலாற்றக்கூடிய விதத்தில் ஊடக நிறுவனங்கள் மற்றும் அவற்றில் சேவை புரியும் தொழில் சார்பாளர்களின் பணிகளுக்குத் தேவையான பொறுப்புக் கூறல் மற்றும் சுதந்திரமான சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாக இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, ஊடகத் துறையில் உயர் தரத்தினைப் பேணுவதற்கும் இலத்திரனியல் ஊடகங்கள், அச்சு ஊடகங்கள் மற்றும் இணையங்கள் என்பவற்றின் பொறுப்புக்களுடான சுயாதீனத் தன்மை மற்றும் அவற்றை பயன்படுத்துபவர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் விதத்தில் நடாத்திச் செல்தல் என்பன சார்பில் ஊடாகவியாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு சனாதிபதி ஊடக விருது விழாவினை முறையாக நடாத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், இணையத்தளங்கள், பாடசாலை மட்ட ஊடகங்கள் மற்றும் ஊடக ஆராய்ச்சி போன்ற ஆறு (06) துறைகளைத் தழுவி சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலுமான 2021 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட படைப்புகளை அடிப்படையாகக் கொண்டு, படைப்பாளிகளை மதிப்பிடுவதற்காக சனாதிபதி ஊடக விருது விழாவை 2022 ஆம் ஆண்டிலும் நாடாத்தும் பொருட்டு வெகுசன ஊடக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.