• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திரைப்படத்துறையை கைத்தொழிலொன்றாக அங்கீகரித்தல்
- இலங்கை திரைப்படத்துறையில் சிறந்த திரைப்படங்கள் பல தயாரிக்கப்பட்டுள் ளதோடு, சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற திரைப்பட கலைஞர்கள் பலரை உலக திரைப்படத்துறைக்கு இலங்கை வழங்கியிருக்கின்றது. ஆயினும் உள்நாட்டு திரைப்படத்துறை கைத்தொழிலொன்றாக சட்டபூர்வமாக பிரகடனப்படுத்தாமை யினால் அதன் அளவும் விருத்தியும் சிறிய உள்நாட்டு சந்தைக்கு மட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அதேபோன்று COVID - 19 உலக தொற்றுநிலைமையின் மத்தியில் உள்நாட்டு திரைப்படத்துறை பாரிய பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. திரைப்படத்துறையை விருத்தி செய்து மேம்படுத்துவதன் மூலம் வாழ்வாதார வழிகளை தோற்றுவித்தல், சமூக, கலாசாரம் அதேபோன்று பொருளாதாரம் நவீனமயப்படுத்தல், சுற்றுலாத்தொழில் மற்றும் கல்வி ஆகிய துறைகளுக்கு பங்களிப்பு நல்குதல் போன்ற பல்வேறுபட்ட நலன்களை அடைய முடிவுமெனவும் இதன் மூலம் பொருளாதாரத்திற்கு கணிசமான அளவு பங்களிப்பினைப் பெற்றுக் கொள்ள இயலுமாகும் என்பதும் இனங்காணப்பட்டுள்ளது. அதேபோன்று உலகில் பெருமளவில் வளர்ச்சிக் கண்டுள்ள திரைப்படத்துறையுள்ள நாடுகளில் இந்த துறையானது வளர்ச்சியடைந்துள்ளது குறித்த இந்த நாடுகள் திரைப்படத்துறையை கைத்தொழிலொன்றாக அங்கீகரித்ததன் பின்னர் என்பதுவும் அவதானிக்கப் பட்டுள்ளது. இதற்கிணங்க நாட்டின் திரைப்படத்துறையின் மேம்பாட்டிற்கும் சர்வதேச அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்வதற்கும் இயலுமாகும் வகையில் திரைப்படத்துறையை கைத்தொழிலொன்றாக பதிவு செய்யும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் கைத்தொழில் அமைச்சரினாலும் கூட்டாக சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.