• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
COVID - 19 தொற்றுநிலமை காரணமாக பிற்போடப்பட்ட பாடசாலை பரீட்சைகளை நடாத்துதல்
- 2021 ஆம் ஆண்டில் COVID - 19 தொற்றுநிலைமை காரணமாக 6 மாத காலத்திற்கு பின்னர், முழுமையாக தரம் 5 வரை மாணவர்களுக்கு 2021 ஒக்றோபர் மாதம் 25 திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதோடு, கல்வி பொதுத் தராதர (சாதாரண தரம்) மற்றும் கல்வி பொதுத் தராதர (உயர் தரம்) என்பனவற்றுக்கு நவெம்பர் மாதம் 08 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கிணங்க, பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணர்களுக்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்படடதன் பின்னர், கல்வி நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான கால அவகாசம் வழங்கவேண்டியுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, 2021 ஆம் ஆண்டிற்கான பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட கால அட்டவணைகள் கல்வி அமைச்சரினால் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் குறித்த கால அட்டவணைக்கு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.

* தரம் 5 இற்கான புலமைபரிசில் பரீட்சை
   2022 சனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை

* கல்வி பொதுத் தராதர (உயர் தரம்) பரீட்சை
   2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 மார்ச் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை வரை

* கல்வி பொதுத் தராதர (சாதாரண தரம்) பரீட்சை
   2022 மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 2022 யூன் மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை வரை