• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- படகுகள், கடற்கலன்கள் இறக்குமதியினை முறைப்படுத்தும் நோக்கில் அவற்றை இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திர முறை மற்றும் அனுமதிப்பத்திர கட்டணம் என்பவற்றிற்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 1969 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க இறக்குமதி, ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2021‑10‑12 ஆம் திகதியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் வௌியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.