• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'வாரி சௌபாக்கியா' - நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இனங்காணப்பட்ட கருத்திட்டங்கள் சார்பில் பகுதி அரசாங்க நிறுவனங்களிடமிருந்து நேரடியாக சேவைகளை பெற்றுக் கொள்தல்
- நாட்டின் கமத்தொழில் பொருளாதாரத்தை நிலைப்படுத்துதல் அதன் மூலம் கிராமிய மக்களின் வாழ்க்கையைப் பலப்படுத்துதல் சார்பில் நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டில் 5,000 குளங்களின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டில் 1,000 குளங்களை/ அணைக்கட்டுக்களைப் புனரமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் நடைமுறைப்படுத்தலை நிறுவனங்களாக நீர்ப்பாசன திணைக்களம், இலங்கை மகாவலி அதிகாரசபை, மகாவலி மதியுரைச் சேவை பணியகம் மற்றும் கமநல அபிவிருத்தி திணைக்களம் போன்ற நிறுவனங்கள் செயலாற்றுகின்றன. நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித்திட்டமானது 3 வருட காலத்திற்குள் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றதோடு, அதன் பொருட்டு அரசாங்க நிறுவனங்கள் அதே​போன்று பகுதி அரசாங்க நிறுவனங்களின் சேவையைப் பெற்றுக் கொள்வது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நீர்ப்பாசன செழுமை நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் நிர்மாணிப்பு வேலைகளை முன்னெடுக்கும் போது 50 மில்லியன் ரூபா வரையிலான ஒப்பந்தங்களை இலங்கை காணி அபிருத்திக் கூட்டுத்தாபனம், அரசாங்க அபிவிருத்தி நிர்மாண கூட்டுத்தாபனம், தேசிய இயந்திர சாதனங்கள் நிறுவனம், மத்திய பொறியியல் சேவைகள் கம்பனி, மகாவலி மதியுரைச் சேவை பணியகம் மற்றும் மகநெகும போன்ற பகுதி அரசாங்க நிறுவனங்களுக்கும் நேரடி ஒப்பந்தங்களை வழங்கும் வழிமுறையினைப் பின்பற்றி ஒப்பந்தங்களை கையளிக்கும் பொருட்டு நீர்ப்பாசன அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.