• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான களஞ்சியசாலைகள் / கட்டடங்களை பயனுள்ள நோக்கங்களுக்காக பயன்படுத்துதல்
- கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான களஞ்சியசாலைகள் / கட்டடங்கள் வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன. இந்த கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான மேலும் பயன்படுத்தப்படாதுள்ள களஞ்சியசாலைகள் / கட்டட மனையிடங்களை அரசாங்க பெறுகை நடவடிக்கை முறையினைப் பின்பற்றி வாடகை அடிப்படையில் குறுகிய காலத்திற்கு தனியார் துறை நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் சபையினால் பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த களஞ்சியசாலைகள் / கட்டட மனையிடங்களை பிரதான விலைமதிப்பீட்டாளரின் மதிப்பீட்டு பெறுமதியினை அடிப்படையாக் கொண்டு வாடகை அடிப்படையில் தனியார் துறை நிறுவனங்களுக்கு குத்தகைக்களி்ப்பதற்கும் அரசாங்க / தனியார் பங்குடமை முதலீட்டு கருத்திட்டங்களுக்கு பொருத்தமான களஞ்சியசாலைகள் / கட்டட மனையிடங்களை ஆர்வவௌிப்படுத்தல்களை கோருவதன் மூலம் நீண்ட கால குத்தகை அடிப்படையில் வழங்குவதற்குமாக வர்த்தக அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.