• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான தலபத்பிட்டியவில் அமைந்துள்ள காணியை கலப்பு அபிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக குத்தகை அடிப்படையில் கையளித்தல்
- நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான தலபத்பிட்டியவில் அமைந்துள்ள ஏக்கர் 2 பேர்ச்சர்ஸ் 6.32 வீஸ்தீரணமுடைய காணியில் கலப்பு அபிருத்தி கருத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக பிரேரிப்புகளை கோருவதற்கு 2020 ஒக்றோபர் மாதம் 19 ஆம் திகதி அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நிர்மாணித்து, வடிவமைத்து, நிதியிட்டு, செயற்படுத்தி கையளித்தல் என்னும் அடிப்படையில் முதலீட்டாளர்களிடமிருந்து போட்டிகரமான அடிப்படையில் பிரேரிப்புகள் கோரப்பட்டுள்ளன. இதன் பொருட்டு முதலீட்டாளர்கள் மூவரினால் பிரேரிப்புகள் முன்வைக்கப்பட்டுள்ளதோடு, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் இணக்கப் பேச்சுக் குழு "M/s International Construction Consortium (Pvt.) Ltd., கம்பனி முன்வைத்த பிரேரிப்பை சிபாரிசு செய்துள்ளது. இந்த சிபாரிசுக்கு நகர அபிவிருத்தி அதிகாரசபையின் முகாமைத்துவ குழுவின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உரிய காணித் துண்டை M/s International Construction Consortium (Pvt.) Ltd., கம்பனிக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் கையளிக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.