• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இறால் பண்ணைகளில் இறால் வளர்ப்பினை தீவிரப்படுத்துவதன் மூலம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியினை அதிகரிக்கும் நோக்கில் சலுகை கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துதல்
- 2020 ஆம் ஆண்டில் சுமார் 8,000 மெற்றிக்தொன் ஆகவுள்ள இறால் உற்பத்தியினை 2025 ஆம் ஆண்டளவில் 50,000 மெற்றிக்தொன் வரை அதிகரிப்பதற்கு தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளது. 2019 ஆம் 2020 ஆம் ஆண்டுகளில் இறால் உற்பத்தியினை அதிகரிக்கும் நோக்கில் Vanamei இறால் வளர்ப்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த இறால் வகையானது வேகமான வளர்ச்சி, குறைவான நோய் தொற்றும் வாய்ப்பு, குளங்களில் வளர்க்கும் போது அதிக இருப்பு அடர்த்தி போன்ற காரணங்களினால் உயர் அறுவடையினைப் பெற்றுக் கொள்ளும் சாத்தியம் நிலவுகின்றது. அதேபோன்று ஆண்டொன்றில் மூன்று (03) சுழற்சிமுறையின் கீழ் இந்த இறால் வகையினை வளர்ப்பதற்கான சாத்தியமும் நிலவுகின்றது. ஆயினும், அதிக அடர்த்தியின் கீழ் இந்த வளர்ப்பினைச் செய்யும் பொருட்டும் இதன் காரணமாக மிகக் கூடுதலான அளவில் குளத்தில் சேரும் காபன் சார்ந்த பொருட்களை அப்புறப்படுத்துவதனை இலகுபடுத்தும் பொருட்டும் வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் பாரம்பரிய சேற்றுக் குளங்களை அடர்த்திகூடிய பலிஎதிலின் மூலம் மறைத்து நவீனமயப்படுத்துவது அத்தியாவசிமானதாகும். அத்துடன் இதற்கு ஒருங்கிணைவாக அதிகரிக்கும் இறால் அறுவடையினை ஏற்றுமதி செய்வதற்கு களஞ்சியப்படுத்துவதற்கும் இதனைக் கொண்டு பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகளை தயாரிப்பதற்கு இறால் பதனிடல் நிலையங்களின் ஆற்றலை அதிகரிப்பதற்கும் அதேபோன்று அவற்றை நவீன தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி நவீனமயப்படுத்துதலும் வேண்டும். இதற்கிணங்க Vanamei இறால் வளர்ப்புக்கு இறால் வளர்ப்பாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தேவையான மூலதனத்தை வழங்குவதற்கு அரசாங்க வங்கிகளின் ஊடாக சலுகை கடன் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு கடற்றொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.