• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-11-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகள்
- ஒருவகை பக்டீரியா காரணமாக தொற்றும் Melioidosis நோய் உலகின் பெரும்பாலான அயன மண்டல பிரதேசங்களில் காணக்கிடைக்கின்றது. நாட்டில் இந்த நோயை முன்னதாகவே கண்டறிவதற்கு, அது தொடர்பிலான அறிவினைப் பெற்றுக் கொள்வதற்கு மற்றும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இயலுமாகும் வகையில் ஆராய்ச்சி ஒத்துழைப்பினை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்கும் ஐக்கிய அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்திற்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க உத்தேச ஆராய்ச்சி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரு தரப்புக்கும் இடையில் கொடை உடன்படிக்கையொன்றினையும் பொருள் மாற்றல் உடன்படிக்கையொன்றினையும் செய்து கொள்ளும் பொருட்டு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.