• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கடன் இணக்க கட்டளைச்சட்டத்திற்கான திருத்தம்
- கடன் இணக்க சபையின் மூலம் கடன் சுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு எதிர்பாரக்கப்படுகின்றது. இந்த பணியினை மிக பயனுள்ள விதத்தில் மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் கடன் இணக்க கட்டளைச்சட்டத்தின் தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு திருத்துவது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட கடன் இணக்க கட்டளைச் சட்டத்தை மீளாய்வு செய்யும் மதியுரைக் குழுவினால் ஆரம்ப சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப சட்டமூலத்தை அடிப்டையாகக் கொண்டு கடன் இணக்ககட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் அதன் பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிக்குமாறும் சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.