• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை போக்குவரத்து சபைக்கு டயர் கொள்வனவு செய்தல்
- இலங்கை போக்குவரத்து சபைக்கு வருடாந்தம் தேவைப்படும் புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட 21,600 டயர் தொகுதிகளைக் கொள்வனவு செய்யும் பொருட்டு திறந்த போட்டிகரமான கேள்வி கோரப்பட்டுள்ளதோடு, அதன் பொருட்டு 02 கேள்விகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உரிய கேள்விக்கு அனுசரணையான ஆகக்குறைந்த விலையினை முன்வைத்துள்ள வரையறுக்கப்பட்ட சியட் களனி சர்வதேச டயர் தனியார் கம்பனிக்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.