• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'Ceylon Tea' சார்பில் புவியியல்சார் அடையாளமொன்றை பெற்றுக் கொள்தல்
- வர்த்தகம் சார்ந்த புலமைச் சொத்துக்கள் உரிமை தொடர்பிலான உடன்படிக்கைக்கு அமைவாக உறுப்பு நாடொன்றின் ஆட்புல எல்லையினுள் அல்லது அந்த ஆட்புல எல்லையின் பிராந்திய பிரதேசமொன்றில் உற்பத்தி செய்யப்படும் பொருளொன்றின் அடையாளம் காண்பதற்கான சுட்டெண் புயியல் சார் குறிக்காட்டி என அழைக்கப்படும். புவியியல் சுட்டெண் மூலம் உரிய உற்பத்தியினை முறைக்கேடாக பயன்படுத்துவதிலிருந்து அல்லது வியாபாரப் பதிவு பெயரை பிரதிமை செய்வதிலிருந்து பாதுகாப்பதோடு, உற்பத்தியின் உண்மையான தன்மையை நுகர்வோருக்கு உறுதிப்படுத்தி நுகர்வோரையும் பாதுகாக்கின்றது. இதற்கிணங்க, 'Ceylon Tea' சார்பில் புவியியல்சார் அடையாளத்தினை பதிவு செய்வதற்குரியதான செயற்பாட்டினை இலகுபடுத்தும் பொருட்டு Centre de Cooperation Internationale en Recherche Agronomique Pour le Developpment (CIRAD) நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு போன்ற நிறுவனங்களின் ஊடாக பிரான்ஸ் அரசாங்கத்தின் Agence Francaise de Developpment (AFD) நிறுவனம் இலங்கை தேயிலை சபைக்கு தொழிநுட்ப உதவியினை வழங்குவதற்கு உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, இந்த நோக்கம் கருதி AFD நிறுவனத்திற்கும் CIRAD நிறுவனத்திற்கும் இலங்கை தேயிலை சபைக்கும் இடையில் முத்தரப்பு உடன்படிக்கையொன்றைச் செய்து கொள்ளும் பொருட்டு பெருந்தோட்டத்துறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.