• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கொள்கலன்களில் இடப்பட்ட பொருட்களை பரிசோதிக்கும் நிலையமொன்றை கெரவலபிட்டியவில் தாபித்தல்
- இலங்கை சுங்கத்தினால் தற்போது கொள்கலன்களில் இடப்பட்ட பொருட்கள் சரிபார்ப்பு நடவடிக்கைகள் ஒருகொடவத்த மற்றும் கிரான்ட்பாஸ் பிரதேசங்களில் அமைந்துள்ள தனியார் துறைக்கு சொந்தமான 3 முனையங்களில் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இந்த முனையங்களில் நிலவும் மட்டுப் படுத்தப்பட்ட இடவசதி மற்றும் வசதிகள் காரணமாக இந்தப் பணிகளில் ஈடுபடும் சுங்க அதிகாரிகளும் அதேபோன்று சேவையினைப் பெற்றுக் கொள்வதற்கு வருகைத்தரும் சேவை பெறுநர்களும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. அதேபோன்று இந்த முனையங்களுக்கு கொள்கலன்களை கொண்டு செல்லும் போது கொழும்பு பிரதேசத்தில் கடும் வாகன நெரிசல் ஏற்படுகின்றது. இந்த நிலைமைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, புளுமெண்டல், பேலியகொட மற்றும் கெரவலபிட்டிய ஆகிய மாற்று இடங்களிலிருந்து மிகப் பொருத்தமான இடமொன்றினை இனங்காண்பதற்கு ஆசிய அபிருத்தி வங்கியின் தொழிநுட்ப உதவியின் கீழ் சாத்தியத்தகவாய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, இதற்கிணங்க, மிகப் பொருத்தமான இடமொன்றாக கெரவலபிட்டிய இடைமாறலுக்கு அண்மையில் இலங்கை காணி அபிருத்தி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான ஏக்கர் 19 பேர்ச்சர்ஸ் 9.26 விஸ்தீரணமுடைய காணித்துண்டொன்றில் உத்தேச பரிசோதனை நிலையத்தினை தாபிப்பது மிகப் பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க குறித்த காணித் துண்டினை உரிய நோக்கத்திற்காக குறித்தொதுக்குவதற்கும் கொள்கலன் சரிபார்ப்புக்கான உத்தேச நிலையத்தினை தாபிப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.