• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொறட்டுவை பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ பீடமொன்றை நிர்மாணிக்கும் கருத்திட்டம்
- மொறட்டுவை பல்கலைக்கழகம் சார்பில் மருத்துவ பீடமொன்றை ஆரம்பிப்பதற்கு இதற்கு முன்னர் அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு தேவையான நிதியினை வழங்குவதற்கு அரேபிய பொருளாதார அபிவிருத்திக்கான குவைத் நிதியம் உடன்பாடு தெரிவித்துள்ளது. இதற்கிணங்க, உத்தேச கருத்திட்டத்திற்கு 10 மில்லியன் குவைத் தினார்களை (அண்ணளவாக) 33.2 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள்) பெற்றுக் கொள்வதற்கான உடன்படிக்கையினை செய்து கொள்ளும் பொருட்டு நிதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.