• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'No New Coal' என்னும் உலகளாவிய வலுசக்தி உடன்படிக்கை / உலகளாவிய தூய வலுசக்தி நிலைமாறல் தொடர்பான கூற்று
- ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றம் தொடர்பிலான சமவாயத்தின் தரப்பினர்களினது 26 ஆவது கூட்டம் 2021 ஒக்றோபர் மாதம் 31 ஆம் திகதியிலிருந்து நவெம்பர் மாதம் 12 ஆம் திகதிவரை ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து கிலாஸ்கோ நகரத்தில் நடாத்தப்படவுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பிலான சமவாயம், கியோதோ சமவாயம் மற்றும் பரீஸ் உடன்படிக்கை என்பவற்றை நடைமுறைப் படுத்துதல் தொடர்பில் மீளாய்வு செய்வதற்கும் குறித்த உடன்பாடுகளை மேலும் விருத்தி செய்து நடைமுறைப்படுத்துவதற்கும் தேவையான தீர்மானங்களை எடுப்பதற்கு இந்த கூட்டத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை வகிக்கும் ஐக்கிய இராச்சியம், ஐக்கிய நாடுகள் தாபனம் மேலும் உறுப்பு நாடுகள் சிலவற்றுடன் இணைந்து அரசாங்கங்களினால் தூய வலுசக்தி நிகழ்ச்சிநிரலிற்கான அர்ப்பணிப்பிற்கு நிலக்கரியற்ற உலகளாவிய வலுசக்தி சமவாயமொன்றை பிரேரிப்பதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த சமவாயத்தில் கைச்சாத்திடும் அரசாங்கங்கள் சுற்றாடல் மாசடைதலை குறைப்பதற்கு அத்துடன் / அல்லது இதன்மூலம் சுற்றாடலுக்கு ஏற்படுத்தும் தாக்கங்களை தவிர்ப்பதற்கு வழிமுறையொன்றில்லாத நிலக்கரி மின் உற்பத்தி கருத்திட்டங்களுக்கு புதிய அனுமதி பத்திரங்கள் வழங்குவதனை உடனடியாக நிறுத்துவதற்கும் நிலக்கரி மின் நிலையங்களின் ஊடாக மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் புதிய கருத்திட்டங்களின் நிர்மாணிப்புகளை ஆண்டிறுதியில் நிறுத்துவதற்கும் பொறுப்பு கூறுதல் வேண்டும். இதற்கிணங்க, இந்த உடன்படிக்கைக்கு ஒத்துழைப்பு நல்கும் பொருட்டு மின்சக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.