• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Sri Lanka Institute of Biotechnology (Pvt.) Ltd, நிறுவனத்திற்கு ஹோமாகம பிட்டிபன பிரதேசத்திலிருந்து காணித் துண்டொன்றை வழங்குதல்
- விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் அது சார்ந்த அபிருத்தி கருத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு நகர அபிருத்தி அதிகாரசபையினால் ஹோமாகம, பிட்டிபன, மாஹேனவத்த பிரதேசத்திலிருந்து 220 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்தக் காணியிலிருந்து பல்வேறுபட்ட கருத்திட்டங்களுக்கு காணித் துண்டுகள் குறித்தொதுக்கப்பட்டுள்ளதோடு, உயிரின தொழிநுட்ப புத்தாக்க பூங்காவொன்றை நிர்மாணிப்பதற்காக அப்போதைய விஞ்ஞான, தொழிநுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சுக்கும் இந்தக் காணியிலிருந்து 13 ஏக்கர் விஸ்தீரணமுடைய காணித் துண்டொன்று ஒதுக்கப்பட்டிருந்த போதிலும், இந்த பூங்கா நிர்மாணிப்பு பணிகள் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. டிஜிட்டல் தொழிநுட்பம் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் கீழுள்ளதும் முழுமையாக அரசுடமை கம்பனியொன்றான Sri Lanka Institute of Biotechnology (Pvt.) Ltd, நிறுவனத்தினால் விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப புத்தாக்க பூங்காவொன்றை நிர்மாணிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதோடு, இந்த நோக்கத்திற்காக மேற்போந்த காணித் துண்டை குறித்தொதுக்கும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.