• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் உணவுப் பயிர்களின் தேவை, நுகர்வு மற்றும் கிடைக்கக்கூடிய நிலை
- உள்நாட்டு உணவு உற்பத்தியின் விளைவு பெருக்கத்தை அதிகரிப்பதற்கு பொருளாதார புத்துயிரூட்டல், வறுமை ஒழிப்பு பற்றிய சனாதிபதி செயலணியின் பங்குபற்றுதலுடன் தேசிய திட்டமிடல் திணைக்களம், சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் மற்றும் உணவு மற்றும் பயிர் உற்பத்தி தொடர்புபட்ட கமத்தொழில், கால்நடை மற்றும் மீன்பிடி துறைகளுக்குரிய அமைச்சுக்கள், இராஜாங்க அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் என்பவற்றின் பங்களிப்புடன் உணவுப் பயிர்களின் தேவை, நுகர்வு மற்றும் கிடைக்கக்கூடிய நிலை தொடர்பில் ஒப்பீட்டு ரீதியில் ஆய்வு அறிக்கையொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. நெல், தானியம் அடங்கலாக அவரையினம் சார்ந்த பயிர், மரக்கறி, பழங்கள் மற்றும் தென்னை போன்ற பயிர்ச்செய்கைகள், மீன் மற்றும் விலங்கு உற்பத்தி போன்ற அடிப்படை உணவு வகுதிகளை உள்ளடக்கி தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கையினை ஆராய்ந்து, அதிலுள்ள வழிகாட்டல்களுக்கு அமைவாக 2022 - 2024 காலப்பகுதி சார்பில் உணவு பயிர் குறியிலக்கு உள்ளடக்கப்பட்ட செயற்பாட்டுத் திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்தும் பொருட்டு மாவட்ட, பிராந்திய கமத்தொழில் குழுக்கள் மற்றும் பிரதேச வாழ்வாதார குழுக்கள் என்பவற்றின் தலைவர்களுக்கும் மாவட்ட செயலாளர்கள் / அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்களுக்கும் தேவையான அறிவுறுத்தல்கள் பொருளாதார புத்துயிரூட்டல், வறுமை ஒழிப்பு பற்றிய சனாதிபதி செயலணியினால் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டம் தொடர்பில் நிதி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டதோடு, திட்டமிடப்பட்டவாறு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு அமைச்சரவையின் உடன்பாடு தெரிவிக்கப்பட்டது.