• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மலைநாட்டு விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்திற்கான திருத்தம்
- 1997 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க விவாகப் பதிவு (திருத்த) சட்டத்தின் மூலம் விவாகம் பதிவு செய்தல் கட்டளைச் சட்டத்தின் 22 ஆம் பிரிவு திருத்தப்பட்டது. இதற்கிணங்க, பருவமடையாதவர்களின் விவாகத்திற்கு பெற்றோர்களின் விருப்பம் தேவையென விதித்துரைக்கப்பட்டுள்ளது. திரு.குணரத்தினத்திற்கு எதிராக பதிவாளர் நாயகத்தின் வழக்கு தீர்ப்புக்கு அமைவாக 18 வயதுக்கு குறைந்த ஒருவருக்கு இலங்கையில் செல்லுபடியாகும் விவாகமொன்றை செய்து கொள்வதற்கான சாத்தியமில்லை. இத்தகைய விவாகமொன்றுக்கு பெற்றோர்களின் அனுமதி அல்லது விருப்பமிருத்தல் சட்டத்தின் முன்னிலையில் செல்லுபடியாகாது. குறித்த வழக்கு தீர்ப்புக்கு அமைவாக தகுதிவாய்ந்த அதிகாரியின் உடன்பாட்டுடன் பருவமடையாத ஒருவரின் திருமணத்திற்கு அதிகாரத்தினை வழங்கும் சட்டங்களின் உரிய பிரிவுகளை இல்லாதொழிக்க வேண்டியுள்ளது. இதற்கிணங்க, ஏற்கனவே முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை திருத்துவதற்கு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு, அதற்கு ஒருங்கிணைவாக மலைநாட்டு விவாகம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் உரிய ஒவ்வாமையை நீக்குவதற்கும் இதன்பொருட்டு சட்டமூலமொன்றை தயாரிப்பதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.