• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டத்திற்கான திருத்தம்
- நொத்தாரிஸ் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கு 2021 யூலை மாதம் 19 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த திருத்தங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இதற்கு ஒருங்கிணைவாக மோசடிகளை தடுக்கும் கட்டளைச் சட்டத்தின் இரண்டாம் பிரிவுக்கு இடைநேர்விளைவாக திருத்தமொன்று மேற்கொள்ள வேண்டுமெனவும் 4 ஆம் 7 ஆம் பிரிவுகளை திருத்த வேண்டுமெனவும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மோசடிகளை தடுக்கும் கட்டளைச்சட்டத்தை திருத்துவதற்கும் அதன் பொருட்டிலான திருத்த சட்டமூலத்தை திருத்துமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.