• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2008 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துதல்
- நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் பணிகளை உரிய வகையில் நிறைவேற்றுவதற்கு இயலுமாகும் வகையில் 2008 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்கு 2019 பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரசபையின் பணிகளை மிக முறையாக நடாத்திச் செல்வதற்கு குறித்த சட்டத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய சில திருத்தங்கள் பின்னர் இனங்காணப்பட்டுள்ளன. குறித்த திருத்தங்களையும் உள்ளடக்கி 2008 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க நகரக் குடியிருப்பு அபிவிருத்தி அதிகாரசபை சட்டத்தை திருத்துவதற்கும் அதற்கான திருத்த சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.