• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒரு துறைமுகத்தில் விசேட கனரக கைத்தொழிலொன்றுக்கு மாத்திரம் அங்கீகாரம் வழங்கும் கொள்கையை மீளாய்வு செய்தல்
- ஒரு துறைமுகத்தில் விசேட துறையொன்று சார்பில் கனரக கைத்தொழிலொன்றுக்கு அங்கீகாரம் வழங்குவது தற்போது நடைமுறையிலுள்ள கொள்கையாகும். பங்களாதேஷ், இந்தியாவின் கிழக்கு கரையோர பிரதேசம், மியன்மார் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் துரித பொருளாதார வளர்ச்சியுடன் வங்காள விரிகுடா சார்ந்த வலயத்தின் கேந்திர துறைமுகமொன்றாக அபிவிருத்தி செய்யும் பொருட்டு, திருகோணமலை துறைமுக அபிவிருத்தி திட்டமானது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தயாரிக்கும் போது திருகோணமலை துறைமுகத்தின் இயற்கையான அமைவிடம், இந்த துறைமுகத்திற்கு அண்மையில் துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான சுமார் 2,000 ஹெக்டயார் விஸ்தீரணமுடைய காணி மற்றும் துறைமுகத்திற்கு சேவைகளை வழங்கும் பொருட்டு நிலவும் உயர் உட்கட்டமைப்பு வசதிகள் போன்ற விடயங்களும் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. மேலும் துறைமுகத்தை அபிவிருத்தி செய்யும் பொருட்டு விசேட வரையறைகளின்றி கைத்தொழில்களை தாபிப்பதற்கு முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு வழங்குவது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, துறைமுகம் சார்ந்து கனரக கைத்தொழில்களை ஆரம்பிப்பதற்கு ஊக்கமுள்ள முதலீட்டாளர்களை ஈர்க்கும் நோக்கில் தற்போது நடைமுறையிலுள்ள ஒரு துறைமுகத்தில் விசேட கனரக கைத்தொழிலொன்று என்னும் கொள்கையினை திருத்தும் பொருட்டு துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.