• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் கைத்தொழில் வலயமொன்றைத் தாபித்தல்
- பிராந்திய மட்டத்தில் உற்பத்தி கைத்தொழிலை மேம்படுத்தும் நோக்கில் கைத்தொழில் அமைச்சினால் பிராந்திய கைத்தொழில் பேட்டை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது தென் மாகாணத்தில் அண்மைக் காலமாக மேற்கொள்ளப்பட்டுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு ஒருங்கிணைவாக மாத்தறை மாவட்டத்தில் கைத்தொழில்களை இலக்காகக் கொண்ட புதிய அபிவிருத்தி வலயமொன்றை வெலிபிட்டிய பிரதேச செயலாளர் பிரிவில் சாலிமவுண்ட்வத்த / ஹல்லலவத்த மையமாகக் கொண்டு 200 ஏக்கர் காணியில் தாபிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, கைத்தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கொள்கையளவில் அங்கீகாரம் வழங்குவதற்கும் இந்தக் கருத்திட்டம் அதேபோன்று இந்த பிரதேசத்தின் அபிவிருத்தி சார்பில் இனங்காணப்பட்டுள்ள முன்னுரிமை கருத்திட்டங்களுக்குத் தேவையான காணிகளை காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமான இந்த தோட்டத்தில் பொருளாதார ரீதியில் பயனுள்ள பயிர்ச் செய்கைகளுக்காக பயன்படுத்த முடியாத காணித் துண்டுகளிலிருந்து ஒதுக்கிக் கொள்ளும் பொருட்டு தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.