• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வரவுசெலவுத்திட்ட விவாதம் தொடர்பிலான நிகழ்ச்சித்திட்டம் - 2022
- 2022 நிதி ஆண்டிற்குரிய வரவுசெலவுத்திட்ட விவாதத்திற்கான நிகழ்ச்சிநிரலினை பின்வருமாறு நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதென மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

* 2021 நவெம்பர் மாதம் 12 ஆம் திகதி வரவுசெலவுத்திட்ட பிரேரிப்புகள் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வரவுசெலவுத்திட்ட விவாதம் ஆரம்பிக்கப்பட்டு 2021 நவெம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை குறித்த விவாதத்தை நடாத்துதல்.

* வரவுசெலவுத்திட்ட குழுநிலை விவாதமானது 2021 நவெம்பர் மாதம் 23 ஆம் திகதியிலிருந்து ஆரம்பித்து 2021 திசெம்பர் மாம் 10 ஆம் திகதி வரை நடாத்துதல்.

* வரவுசெலவுத்திட்ட மூன்றாம் முறை வாசிப்பிற்கான வாக்கெடுப்பு 2021 திசெம்பர் மாம் 10 ஆம் திகதியன்று பி.ப 5.00 மணியளவில் நடாத்துதல்.