• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இணைய பாதுகாப்பு தொடர்பிலான சட்டத்தை வரைதல்
- (அ) பாதுகாப்பு இணைய கட்டளை சட்டம் என்னும் பெயரில் சட்டமொன்றை வரைதல் -

மின்னணு தொடர்பாடல் வளர்ச்சியுடன் பயங்கரவாத குழுக்களினால் மற்றும் குற்றவாளிகளினால் பயங்கரவாத செயற்பாடுகள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் சமூக விரோத நடவடிக்கைகள் தொடர்பில் இணைய மற்றும் மின்னணு தொடர்பாடல்களை பயன்படுத்த பழகியுள்ளனர். இணைய இயங்குமுறை வௌியினூடாக மேற்கொள்ளப்படும் மின்னணு தொடர்பாடல்கள் தேசிய பாதுகாப்பிற்கு நேரடியாக தாக்கத்தை செலுத்தக்கூடிய காரணியொன்றாக இனங்காணப்பட்டுள்ளது. ஆதலால், முப்படை, பொலிஸ் மற்றும் ஏனைய முகவர் நிறுவனங்கள் ஏற்கனவே தமது நிறுவன ரீதியில் தாபித்துள்ள இணைய பாதுகாப்பு பிரிவுகளின் மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளை முறையாகவும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கு இயலுமாகும் வகையில் தேவையான ஏற்பாடுகளை உள்ளடக்கி தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கு சகல துறைகளையும் தழுவும் விதத்தில் புதிய சட்டமொன்றினைத் தயாரிப்பதற்கான கடும் தேவை நிலவுகின்றது.

(ஆ) இணைய பாதுகாப்பு சட்டங்களை விதிப்பதற்காக சட்டமூலமொன்றை வரைதல் -

இணைய பாதுகாப்பு மற்றும் அதன் பொருட்டிலான நிறுவன கட்டமைப்பொன்றினை உருவாக்குவது தொழிநுட்ப அமைச்சின் விடயநோக்கெல்லையின் கீழ் கையளிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலம் சம்பந்தமாக பாதுகாப்பு அமைச்சு, தொழிநுட்ப அமைச்சு மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் கலந்துரையாடியதன் பின்னர், பாதுகாப்பு துறைக்குரிய இணைய பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்ளடக்கி மேல் (அ) வின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளவாறு புறம்பான சட்டமூலமொன்றை வரைவது பொருத்தமானதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பிற்குரிய விடயங்கள் தவிர தேசிய தகவல்கள் மற்றும் இணைய பாதுகாப்பு திறமுறைகளை நடைமுறைப்படுத்துதற்கான ஒழுங்குறுத்துகை கட்டமைப்பொன்றை நிர்மாணித்தல், இந்த நோக்கம் கருதி ஏனைய துணை நிறுவனங்களுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு இலங்கை இணைய பாதுகாப்பு முகவராண்மையை தாபிக்கும் பொருட்டிலான ஏற்பாடுகளைச் செய்தல், நாட்டில் இறுதியானதும் மிக முக்கியதுமான தகவல்கள் சம்பந்தமான உட்கட்டமைப்பு வசதிகளை பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துதல், இணைய பாதுகாப்புக்கு ஏற்படும் அவதானத்துடனான செயற்பாடுகளை தடுத்தல் மற்றும் நாட்டில் முறையான இணைய பாதுகாப்பு சூழலொன்றை உருவாக்குதல் போன்ற நோக்கங்களை அடையும் பொருட்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தும் தேவை எழுந்துள்ளது.

இதற்கிணங்க பாதுகாப்பு அமைச்சரும் தொழிநுட்ப அமைச்சருமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, மேலே குறிப்பிடப்பட்டுள்ளவாறு இரண்டு (02) சட்டமூலங்களை தயாரிப்பதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.