• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கையில் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக நிர்ணயிப்பதற்கும் இனங்காண்பதற்கும் பொருத்தமான வழிமுறையொன்றை சமர்ப்பித்தல்
- இலங்கையில் தேசிய மரபுரிமைகளை திட்டவட்டமாக இனங்காண்பதற்கான தகவு திறன்களோ அல்லது வழிமுறைகளோ இல்லாததன் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, இலங்கை கலாசாரத்தின் தனித்துவத்தினை உறுதிச் செய்யும் கட்புலன் மற்றும் கட்புலனாகா தேசிய மரபுரிமைகளை இனங்காண்பதற்கு பொது மக்களின் கருத்துக்களை பெற்று வழிமுறையொன்றை தயாரிக்கும் பொருட்டு உரிய விடயத்துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் / கல்விமான்களை உள்ளடக்கிய குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு 2020 நவெம்பர் மாதம் 16 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த தீர்மானத்தின் பிரகாரம் நியமிக்கப்பட்ட குழு அதன் அறிக்கையினைச் சமர்ப்பித்துள்ளதோடு, இலங்கையர்களுக்கு சொந்தமான தேசிய மரபுரிமைகளை இனங்காணுதல், ஆவணப்படுத்துதல், பாதுகாத்தல், பிரகடனப்படுத்தல், ஒழுங்குவிதிகள் வௌியிடுதல், கையகப்படுத்தல், ஆராய்ச்சிகளை மேற்கொள்தல் போன்ற பணிகளை உரிய வகையில் முகாமித்துக் கொள்வதற்கு மையப்படுத்தப்பட்ட சுயாதீன நிறுவன கட்டமைப்பொன்றை தாபிக்கும் தேவை இதன் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்தக் குழுவின் சிபாரிசின் பிரகாரம் தொடர் நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.