• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறன் இலங்கையின் ஆரம்பம் - டிஜிட்டல் வங்கிமயப்படுத்தல், Blockchain தொழிநுட்பம், Cryptocurrency Mining மற்றும் இலங்கைக்குத் தேவையான சேவைகளை வழங்குதல்
- டிஜிட்டல் வர்த்தக சூழல் முறைமையொன்றினை உருவாக்குவதனை இலகுபடுத்தும் பொருட்டு டிஜிட்டல் வங்கிமயப்படுத்தல், Blockchain தொழினுட்பம், Cryptocurrency Mining மற்றும் தேவையான சேவைகளை வழங்குதல் போன்ற துறைகளை உள்ளடக்கி இணைந்த முறைமையொன்றை அபிவிருத்தி செய்யும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. தெற்காசியாவிலுள்ள பெரும்பாலான நாடுகளில் ஏற்கனவே இந்த துறைகளை மதிப்பிடுவதற்கும் அபிவிருத்தி செய்வதற்குமான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, இந்த நாடுகளுடன் போட்டிகரமான ரீதியில் செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு துரிதமாக கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இதற்கிணங்க, இந்த துறைகளில் செயலாற்றும் கம்பனிகளின் முதலீடுகளை கவர்ந்திழுப்பதற்கு தேவையான சட்டங்கள், ஒழுங்குவிதிகள் என்பன தொடர்பில் அமைச்சரவைக்குத் தேவையான விடயங்களை முன்வைப்பதற்காக அரசாங்க தனியார் துறைகளைச் சேர்ந்த தேர்ச்சிமிக்க தொழில் வல்லுநர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் 1978 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்க முதலீட்டுச் சபை சட்டம் மற்றும் அதற்குரிய திருத்தங்களிலுள்ள ஏற்பாடுகளின் கீழ் Cryptocurrency Mining கம்பனிகளுக்கு இலங்கையில் முதலீடு செய்வதற்கு அங்கீகாரம் வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் பொருட்டு இலங்கை முதலீட்டுச் சபைக்கு அனுமதி வழங்குவதற்குமாக அபிவிருத்தி கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.