• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் திரவ பெற்றோலிய எரிவாயு (LPG) வர்த்தகத்தில் ஈடுபடுதல்
- இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் திரவ பெற்றோலிய எரிவாயு (LPG) 70 மெற்றிக்தொன் தொடக்கம் 90 மெற்றிக்தொன் வரையில் நாளொன்றுக்கு உற்பத்தி செய்யப்படுவதுடன், இது நாட்டில் நிலவும் கேள்வியின் 5 சதவீதமாகும். அதேபோன்று நாளொன்றுக்கு 10,000 பெரல்கள் ஆற்றலைக் கொண்ட புதிய சுத்திகரிப்பு நிலையமொன்றைத் தாபிப்பதற்கும் தற்போதுள்ள சுத்திகரிப்பு நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கும் ஏற்கனவே சாத்தியத்தகவாய்வொன்று மேற்கொள்ளப்பட்டு வருகின்றதொடு, இந்த அபிவிருத்தி கருத்திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதற்குத தேவையான திட்டங்களும் தயாரிக்கப்பட்ட வருகின்றது. இதற்கிணங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மூன்றாவது போட்டியாளராக எரிவாயு சந்தைக்கு பிரவேசிப்பதன் முக்கியத்துவம் இனங்காணப்பட்டுள்ளது. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்திகளை பயன்படுத்தி திரவ பெற்றோலிய எரிவாயு (LPG) வர்த்தகத்தினை ஆரம்பிப்பதற்கு இயலுமாகும் வகையில் இந்தக் கூட்டுத்தாபனத்தின் துணைக் கம்பனியொன்றைத் தாபிக்கும் பொருட்டு வலுசக்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.