• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் நியூசிலாந்தின் மாசி பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- இருதரப்புக்கும் இடையில் உயர் கல்வி துறையின் பரஸ்பர ஒத்துழைப்பிற்காக ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் நியூசிலாந்தின் மாசி பல்கலைக்கழகத்திற்கும் இடையில் 05 வருட காலத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று 2012 ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதியன்று செய்து கொள்ளப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதி முடிவுற்றதன் பின்னர் குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையினை நீடிப்பதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இருதரப்புக்கும் இடையில் நிலவிய கலந்துரையாடலுக்கு அமைவாக 2021 ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து மீண்டும் 05 வருட காலத்திற்கு குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கையை நீடிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, உரிய புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.