• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-10-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அபிவிருத்தி முன்னுரிமை சார்பில் புவியியல் வளங்களைப் பயன்படுத்துதல்
- அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கு எதிர்வரும் ஐந்து (05) வருட காலத்திற்குத் தேவையான கருங்கல், மணல், மண், சரளைக்கல் மற்றும் களிமண் அளவுகளை மதிப்பிடுதல், இந்த கருத்திட்டங்களுக்காக புவியியல் வளங்களின் விநியோக முறைகளை இனங்காணுதல், நிர்மாணிப்புத் துறையின் ஏனைய கருத்திட்டங்கள் மற்றும் சிறு வாழ்வாதாரா நோக்கங்களுக்குத் தேவையான புவியியல் வளங்களின் பாவனையின் போது பின்பற்றப்படும் அனுமதிப்பத்திர செயற்பாட்டினை இலகுவாக்குதல், பல்வேறுபட்ட அபிவிருத்தி நோக்கங்களுக்கு பயன்படுத்தக்கூடிய காணிகளை இனங்காணுதல் போன்ற நோக்கங்களுக்கான புவியியல் வளங்கள் பற்றிய சனாதிபதி செயலணி தாபிக்கப்பட்டுள்ளது. நிர்மாணிப்பு கைத்தொழிலுக்குத் தேவையான கருங்கல், மணல், மண் / சரளைக்கல் மற்றும் களிமண் பெற்றுக் கொள்ளும் போது பின்பற்றப்படும் அகழ்வு அனுமதிப்பத்திர செயற்பாடு பொதுமக்களுக்கும் சேவை வழங்குநர்களுக்கும் இலகுவாக்குவதற்கான சிபாரிகள் இந்த செயலணியால் அதன் ஆரம்ப அறிக்கையின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த சிபாரிசுளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குறித்த செயற்பாடுகளை எளிமையாக்குவதற்கு குறித்த செயற்பாட்டுடன் தொடர்புபட்ட சகல நிறுவனத் தலைவர்களுக்கும் தேவையான ஒழுங்குவிதிகள் உள்ளடக்கப்பட்ட சுற்றறிக்கையொன்றை வௌியிடுவதற்கும் நிர்மாணிப்பு கைத்தொழிலுக்காக பயன்படுத்தப்படும் கனிம அகழ்வுகள், ஏற்றி இறக்கல் மற்றும் வரத்தகம் சம்பந்தமாக அனுமதிப்பத்திரங்களை வழங்கும் போது அரசாங்க நிறுவனங்களினால் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பில் நடவடிக்கை கோவையொன்றை வௌியிடுவதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.