• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டத்தை திருத்துதல்
- வறுமை நிலையிலுள்ளவர்களின் வீட்டுத் தேவையினை பூர்த்தி செய்வதற்கும் வறுமை நிலையிலுள்ள வாடகைதாரர்களை பாதுகாப்பதற்காகவும் 1972 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும் தற்போது இந்த வீட்டு வாடகை சட்டத்திலுள்ள காலம் கடந்த ஏற்பாடுகளின் மூலம் வீட்டுத் துறைக்கு, வாடகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள மனையிடங்களுக்கு அதேபோன்று சொத்து கொடுக்கல் வாங்கல்களுக்கு பிரதிகூலமான தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆதலால், தற்போதைய தேவைகளுக்கு ஏற்ற விதத்தில் குறித்த சட்டத்தை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. நீதி அமைச்சரினால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகை பற்றிய சட்ட ஆலோசனை குழுவினால் வீட்டு வாடகை சட்டத்தை திருத்துவதற்கான இடைகால அறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்தக் குழுவின் அறிக்கை மூலம் பிரேரிக்கப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி வீட்டு வாடகை சட்டத்தை திருத்துவதற்கும் அதன் பொருட்டு திருத்தப்பட்ட சட்டமூலமொன்றை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்குவதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.