• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவைக்கான திருத்தம்
- விசேட காரணங்கள் உள்ள சந்தர்ப்பங்களில் விளக்கமறியலுக்கு உட்படுத்தும் கட்டளையொன்றை நீடிக்கும் நோக்கில் எவரேனும் சந்தேகநபர் ஒருவர் அல்லது குற்றவாளியொருவர் நீதவான் முன்னிலையில் தனிப்பட்ட வகையில் ஆஜர்ப்படுத்துவதற்கு தேவைப்படாத விதத்தில் விதிமுறைகளை உள்ளடக்குவதற்காக 144அ ஆம் பிரிவிற்கும் ஏதேனும் வழக்கு விசாரணையொன்று மேல் நீதிமன்றத்தில் நிலவுகின்றதாயின் அல்லது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாயின் அது எவரேனும் குற்றவாளி ஒருவருக்கு எதிராக இருப்பின் குறித்த குற்றவாளியை மேல் நீதிமன்ற நீதியரசரின் முன்னிலையில் தனிப்பட்ட வகையில் ஆஜர்ப்படுத்துவதற்கு தேவைப்படாத விதத்தில் விதிமுறைகளை உள்ளடக்குவதற்காக 241அ ஆம் பிரிவிற்கும் புதிய ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தும் பொருட்டு 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையை திருத்தும் பொருட்டு சட்டமூலமொன்றை வரைவதற்கு 2020 செப்ரெம்பர் மாதம் 28 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, சட்டவரைநரினால் உரிய சட்டமூலமானது தயாரிக்கப்பட்டுள்ளதோடு, இதன் பொருட்டு சட்டமா அதிபரின் உடன்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.