• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாண மேல் நீதிமன்ற (விசேட ஏற்பாடுகள்) சட்டத்திற்கான திருத்தம்
- சிறு உரித்து கோரிக்கைகள் நீதிமன்றங்கள் சம்பந்தமாக விசேட நடவடிக்கை முறையினை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்யும் பொருட்டு புதிய சட்டமொன்றை வரைவதற்கும் சிறு உரித்து கோரிக்கைகள் நீதிமன்றங்களை தாபிப்பதற்கு இயலுமாகும் வகையில் 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்துவதற்கும் 2021 யூன் மாதம் 14 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. குறித்த புதிய சட்டம் மற்றும் உத்தேச திருத்தங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதற்கு இயலுமாகும் வகையில் 1990 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மாகாண மேல் நீதிமன்ற (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆரம்ப நீதிமன்ற பட்டியலில் சிறு உரித்து கோரிக்கைகள் நீதிமன்றத்தை உள்வாங்குவதற்காக குறித்த சட்டத்தின் 5(அ) ஆம் பிரிவை திருத்தும் தேவை இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, குறித்த சட்டத்தை திருத்துவதற்கும் இதன் பொருட்டு சட்டமூலமொன்றை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டும் நீதி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.