• Increase font size
  • Default font size
  • Decrease font size

2021-09-27 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், பராயமடையாதோர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்தின் கீழ் தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்களுக்கான ஒழுங்கு விதிகளைத் திருத்துதல்
- பெண்கள், பராயமடையாதோர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கமர்த்துதலை ஒழுங்குறுத்துவதற்கும் அவர்களுடைய தொழில் பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டும் 1956 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க பெண்கள், பராயமடையாதோர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கமர்த்தல் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2021 சனவரி மாதத்திலிருந்து சிறுவர்களை தொழிலுக்கமர்த்தும் ஆகக்குறைந்த வயதெல்லையானது 16 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சர்வதேச தொழில் அமைப்பின் ஆகக்குறைந்த வயது தொடர்பிலான சமவாயத்திற்கு இலங்கை செயல்வலுவாக்கமளித்தன் பின்னர் 2006 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க பெண்கள், பராயமடையாதோர் மற்றும் சிறுவர்களை தொழிலுக்கமர்த்துதல் சட்டத்திற்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு அமைவாக தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்களுக்கான ஒழுங்குவிதிகள் தொழில் என்னும் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 16 தொடக்கம் 18 வயதிற்கு இடைப்பட்ட பராயமடையா தோருக்கான 51 தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளதோடு, குறித்த தொழில்களில் ஈடுபடுத்துவது சட்டத்தினால் தண்டனை பெறக்கூடிய குற்றமொன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 10 வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஒழுங்குவிதிகளை மேலும் மீளாய்வு செய்து, வீட்டு வேலை, அழகுக்கலை சார்ந்த தொழில், கணனி மற்றும் மின்னணு உபகரணங்கள் தொடர்பிலான தொழில்கள் அடங்கலாக காலத்தின் தேவைக்கமைய 20 தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கிணங்க, தீங்கு விளைவிக்கக் கூடிய தொழில் பட்டியல் 71 ஆக விரிவுபடுத்தி சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதன் பின்னர், திருத்தப்பட்ட ஒழுங்குவிதிகளை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்குமாக தொழில் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.